ஈழத்தமிழனுக்கு கொழும்பில் வந்த கொடுமையா இது

எங்கே செல்லும் இந்த பாதை இதை யார்தான் அறிவார்……..

கொழும்பில் கடைதிறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஓவியா வீதியில் கம்பள வரவேற்பு.

நாக்கை தொங்கப் போட்டு செல்பி எடுத்த மானங்கெட்ட கூட்டம் என முகநுால் பக்கங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகிறது.

இன்றைய சூழலில் இது தேவையா அல்லது இன் நிலைக்கு தமிழ் சமூகம் தள்ளப்பட்டு விட்டதா என பலர் கவலையடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இடத்தில் தென்னிந்திய நடிகை ஓவியாவை குறை கூற முடியாது எனவும் கூறப்படுகிறது…

இலங்கையின் பெருமையை துாக்கி நிமிர்த்திய இரு யாழ்ப்பாண தமிழச்சிகள்

இலங்கையின் வலைப்பந்தாட்ட அணி ஆசியாவில் மகத்தான சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழச்சிகள் என்பதால் (தர்ஜினி, எழிலேந்தினி) தமிழர்களாகிய நாம் மிகுந்த பெருமைகொள்கிறோம். தர்ஜினியின் அபாரத் திறமை சொல்லற்கரியது.

எம் மண்ணிலே தர்ஜினி போல், எழிலேந்தினிபோல் ஏராளம் ஏராளம் வீரவீராங்கனைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் தென்னிலங்கை கண்டுகொள்வதில்லை.

இனத்துவ விகிதாசார அடிப்படையில் கூட எம்மவர்க்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை. நாம் தமிழர் என்ற ஒரேயொரு காரணம்தான் இந்நிலைக்கு காரணம்.அதனால்தான் திறமையே இல்லாத தனிச் சிங்கள வீரர்களைக்கொண்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணி அண்மைய ஆட்டங்களில் படுதோல்வியைச் சந்தித்து மண் கவ்வுகின்றது.

இனவாதத்தை விட்டுவிட்டு வெளியே வந்து, தர்ஜினி போல், எழிலேந்தினிபோல் ஆயிரமாயிரம் வீர வீராங்கனைகள் எம் மண்ணிலே தெரிவார்கள்! நாடு எந்தளவுக்கு முன்னேறும் என்பதை அதன் பின்னர் பாருங்கள்.

கிளிநொச்சியில் காப்புறுதி முகாமையாளரிற்கு அதிகாலையில் காத்திருந்த பேரதிர்ச்சி

கிளிநொச்சி இரணைமடுவில் நேற்று அதிகாலை 1.00மணியளவில் பஸ்ஸிலிருந்து வந்திறங்கி பாரதிபுரத்திலுள்ள விடுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த தனியார் காப்புறுதி முகாமையாளரை வழிமறித்த இனந்தெரியாத எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு பணப்பையையும் பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சியில் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றி வரும் எஸ். வினிஸ்கரன் மார்க் நேற்று முன்தினம் பஸ்ஸிலிருந்து மன்னாருக்கு தனது சொந்த தேவை காரணமாக சென்றுவிட்டு வரும்போது நேற்று அதிகாலை ஆகிவிட்டது.

பஸ்ஸிலிருந்து இறங்கி விடுதியினை அண்மித்த சமயத்தில் 1.15மணியளவில் 25தொடக்கம் 30வயதுடைய எட்டு பேர் கொண்ட இளைஞர்கள் குழுவால் குறித்த முகாமையாளரை வழிமறித்து உன்னில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.

உன்னுடைய அடையாள அட்டையை காட்டு எனக்கூறி விட்டு உன்னுடைய இருப்பிடத்திலும் சந்தேகம் உள்ளது எனக்கூறி வலுக்கட்டாயமாக மோட்டார்‌ சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்று தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாது அவரிடம் இருந்த பணப்பையையும் பறித்துக்கொண்டு தப்பித்துச்சென்றுள்ளனர்.

காயமடைந்து மயக்க நிலையில் இருந்த தனியார் காப்புறுதி முகாமையாளர் அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு அவசர‌ இலக்கமான 119 ற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்களால் குறித்த முகாமையாளர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்பணப்பையில் 21,900ரூபா பணமும், அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவை இருந்ததாகவும், தாக்குதல் நடத்திய இளைஞர் குழு மதுபோதையில் இருந்ததாகவும் குறித்த முகாமையாளரால் இன்று காலை வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

யாழ் திருமணத்தில் கணவனை கைது செய்த மனைவி! வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதி பகுதியில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்று அங்குள்ள பெருமளவான மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருமண வைபவத்திற்கு சென்ற பலரை மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை ஒரு நிமிடம் அவர்களை ஸதம்பிதமடையச் செய்துள்ளதுடன், வியப்பையும் அதே சமயம் ஒரு நகைச்சுவையான அனுபவத்தையும் ஒருசேர கொடுத்துள்ளது.

பதாகையில் திருமண திகதியை கணவன் கைதாகும் திகதி எனவும், கைதானவரின் விபரம் என மணமகன் தொடர்பான விபரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பெண்ணின் மனதை திருடிய குற்றத்திற்காக அந்த மணமகன் கைது செய்யப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை அனைவரையும் புன்னகைக்க வைத்துள்ளது.

இந்நிலையில், திருமணத்திற்கு வருகைத்தந்தவர்களுக்கு மணமக்கள் கொடுத்த இந்த வியப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சூடுவெந்தபுலவில் வன இலாகாவின் வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்

வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் நீண்ட காலமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் தமது காணிகளை வன இலாகாவினர் உரிமை கோருவதாக தெரிவித்து மக்கள் நேற்றைய தினம் முரண்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அங்கு வருகை தந்த வன இலாகா அதிகாரியின் வாகனத்தினை மறித்து வீதியில் தடையேற்படுத்தி தடுத்த மக்கள், சமரசப்பேச்சுக்களை அடுத்து வாகனத்தை விடுவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, சூடுவெந்தபுலவு கிராமத்தில் பல ஆண்டு காலமாக அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் அங்குள்ள காணிகளில் மேட்டு நிலப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று நிலத்தினை பண்படுத்தும் நோக்கோடு உழவு இயந்திரங்களில் மூலம் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அங்கு வருகைதந்த வன இலாகாவினரும், விசேட அதிரடிப்படையினரும் குறித்த காணி வன இலாகாவிற்கு சொந்தமானது எனவும் அங்கு எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அங்கு உழவு வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன், உழவு இயந்திரத்தினையும் கைப்பற்றி தமது வவுனியா அலுவலகத்திற்கு கொண்டு சென்றிருந்ததுடன் மற்றைய உழவு இயந்திரங்களையும் பறிமுதல் செய்ய முற்பட்டிருந்தனர்.

இதன்போது அங்கு கூடிய கிராம மக்கள் வன இலாகாவினருடன் முரண்பட்டுக் கொண்டனர். செட்டிகுளம் பிரதேச செயலாளரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில் குறித்த காணி தொடர்பாகவும் அதற்கான ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை கிராம மக்கள் பிரதேச செயலாளருக்கும், வன இலாகாவினருக்கும் காட்டியதுடன் தாம் பூர்வீகமாக இக்காணியில் வாழ்வாதாரத்திற்காக பயர்ச்செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வந்துள்ள போதிலும் அதனை பிரதேச செயலகம் விடுவிப்பு செய்யவில்லை எனவும், தெரிவித்த நிலையில் வன இலாகாவினர் தமது காணி என தெரிவித்து வாழ்வாதார வழிகளை இல்லாமல் செய்ய முயலுகின்றனர் எனவும் குற்றம் சாட்டினர்.

இக்காணிகளுக்கு அருகில் 3 குளங்கள் உள்ளதுடன், வயல் நிலங்களும் உள்ளன. அவ்வாறு இருக்கையில் நடுப்பகுதி எவ்வாறு வன இலாகாவினருக்கு சொந்தமாகும் என கிராம மக்கள் கேள்வியெழுப்பியதுடன் குறித்த பகுதிக்கு பின்புறமாக கல் உடைக்கும் நிறுவனமொன்றிற்கு வழங்கிவிட்டு தற்போது தமது காணிகளை சொந்தம் கொண்டாடுகின்றனர் எனவும் வன இலாகாவினர் மீது குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் அங்கு இடம்பெற்ற பேச்சுக்களில் அரசாங்க அதிபர் மற்றும் வன இலாகா உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவினை அறிவிப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

எனினும் வன இலாகாவினர் கொண்டு சென்ற உழவியந்திரத்தினை விடுவிக்காமல் வன இலாகாவினர் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்து வீதியை மறித்து தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

இச் செயற்பாட்டால் கோபமுற்ற வனவள அதிகாரி எவருடனும் முரண்படாது நடந்து செல்வதாக கூறி அங்கிருந்து தனது உத்தியோகத்தர்களுடன் நடந்து சென்றிருந்தார்.

எனினும் அங்கிருந்த சிலர் அரச அதிகாரிகளின் வாகனத்தினை தடுப்பது கூடாது எனவும் தாம் மனச்சாட்சியுடன் நடப்போம் என தெரிவித்து வாகனத்தினை செல்ல அனுமதியளித்திருந்தனர்.

இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் முத்து முகமது, பிரதி அமைச்சர் கே. கே.மஸ்தானின் செயலாளர்களும் குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரைக் கண்டு பயந்தோடும் பெண்கள்!

யாழ். பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்றும் பெண்ணின் மீது ஆண் விரிவுரையாளர் துப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மதியம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

விஞ்ஞானத்துறை கணனி விரிவுரையாளரே எந்தவித காரணமும் இல்லாமல் உதவி விரிவுரையாளரான பெண் விரிவுரையாளர் மீது காறித்துப்பியுள்ளார்.இதனால் பல்கலைக்கழகத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவிகளிடம் எமது செய்தியாளர் வினவிய போது, அவர் ஒரு மன நோயாளி என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் போல் இதற்கு முன்னரும் பல தடவைகள் இடம்பெற்றதாகவும் ஆனாலும் இவர் மீது பல்கலைக்கழகம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

இவரைக் கண்டால் மாணவிகள் தொடக்கம் பெண் விரிவுரையாளர்கள் வரை ஒதுங்கிச் செல்வதாகவும் தெரிவித்தனர்.