ஐ.தே.கட்சியின் பிரதியமைச்சர் பதவி விலகப் போவதாக எச்சரிக்கை!

Image result for UNP
ஐக்கிய தேசிய கட்சியின் சில பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களின் கீழ் பணியாற்றும் பிரதியமைச்சர்களே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
குறித்த அமைச்சர்கள், தமது அதிகாரங்களை பிரதியமைச்சர்களுக்கு வழங்காமலிருந்து வருவதாக குற்றம் சுமத்தியே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த முடிவுக்கு செல்வதற்கு முன்னர் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து தமது பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்க போவதாக பிரதியமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment