ஸ்ரீ.சு.கட்சியின் ஒற்றுமைக்கு ஐ.தே.கட்சி பிரிந்து செல்ல வேண்டும்

Image result for பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் ஐக்கிய தேசிய கட்சி பிரிந்து செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எமக்கு என்ன தண்டனை வழங்கினாலும் பரவாயில்லை ஆனால், ஐக்கிய தேசிய கட்சிக்குஎதிரான அரசியல் செயல்பாட்டினை நிறுத்த மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு கிடைக்கும் தண்டனைகள் தொடர்பில் தாம் கவலையடையவில்லை என்றும் தாம் பதவிகளை எதிர்பார்த்து அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அரசியல் கொள்கைகள் வேலைத்திட்டங்கள் வேறு என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக தான் போராடுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மில்லியன் கணக்கான பொதுமக்களின் முன்பு பாராளுமன்ற பெரும்பான்மை செல்லுபடியற்றது என்றும் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் பலத்துக்கு முன்பு இந்தியா, அமெரிக்காஆகிய நாடுகள் அருகில் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை எமக்கு தண்டனை வழங்குமாறு கோருபவர்களிடம் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment