அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக புகையிலை வரியில் பெரும் இழப்பு . . . .

திறைசேரி மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகள் அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய புகையிலை வரியில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புகையிலை மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான வரி ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் சிகரட் உற்பத்திகளுக்கு 72 வீத வரி விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் சிகரட் தயாரிப்பு நிறுவனத்தின் அழுத்தம் காரணமாக தற்போது அந்த வரியில் இருந்து இரண்டு ரூபா குறித்த கம்பெனிக்கே திரும்ப வழங்கப்படுகின்றது. அரசாங்கத்துக்கு மூன்று ரூபா மட்டுமே வரியாக கிடைக்கின்றது.
இதன்மூலம் வருடமொன்றுக்கு 56 ஆயிரம் மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சிகரட் உற்பத்திகளுக்கான வரியை 90 வீதமாக உயர்த்தும் சுகாதார அமைச்சின் யோசனைக்கும் நிதியமைச்சு மற்றும் திறைசேரி அதிகாரிகள் ஒத்தாசையாக செயற்படப் போவதில்லை என்றும் சிகரட் கம்பனியின் நலனைப் பாதுகாப்பதில் அவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்துவார்கள் என்றும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment