பாதயாத்திரையை பேலியகொடையில் முடக்க அரசாங்கம் திட்டம்

Image result for பாதயாத்திரையை பேலியகொடையில்
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையை பேலியகொடை பிரதேசத்துடன் முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படுவதை காரணம் காட்டி பாதயாத்திரை கொழும்புக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் பொலிசாரைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் கண்டியில் அம்பியூலன்ஸ் வண்டி மீதான தாக்குதலுக்கு சட்டவிரோதமான முறையில் கூடிய குற்றச்சாட்டு மற்றும் வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பாதயாத்திரையின் முக்கியஸ்தர்களை பேலியகொடவில் வைத்து கைது செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் பாதயாத்திரை கிரிபத்கொடையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பேலியொகொடையை அண்மிக்கும் நிலையில் பாதயாத்திரையுடன் இணைந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
எனினும் எக்காரணத்தைக் கொண்டும் பாதயாத்திரை கொழும்புக்குள் நுழைய விடுவதில்லை என்ற முடிவில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் திட்டங்களை தீட்டி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment