இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்: குறுக்கிட்ட வருணபகவான்

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி முடிக்கப்பட்டுள்ளது.
முதல் இன்னிங்சில் மேற்கிந்திய அணி 196, இந்தியா 500/9 ('டிக்ளேர்') ஓட்டங்கள் எடுத்தன.
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய மேற்கிந்திய அணி, பெரிதாக சோபிக்கவில்லை. இஷாந்த் 'வேகத்தில்' சந்திரிகா (1) போல்டானார். அடுத்து பிராத்வைட் (23), அமித் மிஸ்ரா 'சுழலில்' சிக்கினார். முகமது ஷமியிடம், சாமுவேல்ஸ் (0), டேரன் பிராவோ (20) சிக்கினர்.
மேற்கிந்திய அணி உணவு இடைவேளையின் போது இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 48 ஓட்டங்கள் எடுத்து, 256 ஓட்டங்கள் பின்தங்கியிருந்தது.

உணவு இடைவேளைக்கு பின் கன மழை பெய்ததால் வெறும் 15.5 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நாளை வானிலை ஒத்துழைக்கும் பட்சத்தில் எஞ்சிய 6 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி 2வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறலாம்.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment