மட்டு நகரில் கிரிக்கெட் விளையாடிய அவுஸ்திரேலிய கழக மட்ட அணி

Image result for australia cricket team 2016
மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக அவுஸ்ரேலியா பிறிஸ்பன் A.A.Potoroos கிரிக்கெட் அணி மற்றும் மட்டக்களப்பு மைக்கல்மென் இணைந்து 30 ஓவர் கொண்ட நட்புறவு கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று இன்று நடைபெற்றது.
மைக்கல்மென் அணி மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையில் ஆரம்பமான கிரிக்கெட் போட்டி உத்தியோகபூர்வமாக கிழக்கு பல்கலைகழகத்தின் மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தீர்மானித்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மைக்கல்மென் அணி முப்பது ஓவர் முடிவில் நான்கு பேர் ஆட்டமிழப்புக்கு 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பின்னர் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி சகல வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிளந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.

இரு அணிகளுக்குமிடையிலான நட்புறவு கொண்ட கிரிக்கெட் போட்டியினை மைக்கல்மென் மற்றும் மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுச் செயலாளர் ஐ.ஜே.சில்வெஸ்டர் ஒழுங்குபடுத்தலின் கீழ் அழைக்கப்பட்டமை குறுப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment