24 மணிநேர விநியோக சேவையை அறிமுகம் செய்துள்ள Hire1 மற்றும் MyDeal.lk

நாட்டின் முன்னணி நிறுவனமான Hire1 ஆனது, இலங்கையின் முன்னணி தினசரி Deal களை வழங்கும் இணையத்தளங்களில் ஒன்றான MyDeal.lk உடன் இணைந்து அதன் வளர்ந்துவரும் வாடிக்கையாளர் தளத்தின் ஒன்லைன் ஓர்டர்களின் விரைவான விநியோகத்தை உறுதிபடுத்தும் நோக்கில் புரட்சிமிக்க விநியோகத்தை அறிமுகம் செய்துள்ளது. 
கவர்ச்சிகரமான சலுகைகளை தொடர்ச்சியாக எதிர்பார்க்கும் வாடிக்கையாளர் விருப்பைப் புரிந்து கொண்ட MyDeal.lk ஓர்டர்களை விரைவாக விநியோகம் செய்வது மிக முக்கியம் என்பதை நன்குணர்ந்துள்ளது.
சக்திமிக்க பங்காளருடனான இந்த கைகோர்ப்பின் மூலமாக நம்பிக்கை மற்றும் சரியான நேரத்திற்கு விநியோகிக்க முடிவதுடன் இலங்கையின் Deal சந்தையின் முன்னணி நிறுவனமானது சிறப்பான Shopping அனுபவத்தை வழங்கி வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவுள்ளது.
Hire1 நிறுவனத்துடனான கைகோர்ப்பானது கொழும்பிலுள்ள 51 நகரங்களுக்கான MyDeal.lk இன் விநியோக நேரத்தினை 24 மணிநேரமாக குறைத்துக் கொள்ள வழிவகுக்கும். MyDeal.lk மற்றும் Hire1 கைகோர்ப்பின் மூலமாக வழங்கப்படும் பெறுமதி சேர்ப்புகள் தற்போதைய உள்நாட்டு இணைய வர்த்தகச் சூழலில் வடிணையற்றதாகவுள்ளது.
2015ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Hire1 நிறுவனமும் அதன் செயலியும் அதன் பயன்படுத்துநர்களுக்கும் விசேடமாக வர்த்தகர்களுக்கும் தொந்தரவு இல்லாத அணுகுமுறை மற்றும் சிறந்த விநியோகத் தெரிவுகளுடன் கூடிய சத்திமிக்க செயல்பாடுகளை வழங்கி வருகிறது.
Hire1 நிறுவனமானது குறிக்கப்பட்ட நேரத்திற்குள் நீங்கள் ஓர்டர் செய்த பொருட்கள் உங்கள் வீட்டு வாசலிற்கே விநியோகம் செய்யக்கூடிய ஸ்தானத்தில் உள்ளது. பொருட்களை விநியோகிக்கும் போது பணத்தை செலுத்தக்கூடிய வகையில் வாடிக்கையாளருக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்” என நிறுவன இணை-ஸ்தாபகர் யெஷாந்த் குணவர்தன தெரிவித்துள்ளார்.
2011இல் நிறுவப்பட்ட MyDeal.lk இணையத்தளம் இலங்கையின் டீல்கள் சந்தையில் மிக முக்கிய நிறுவனமாக உள்ளதுடன் அதன் வாடிக்கையாளருக்கு ‘நகரின் சிறந்த Deals’ இனை தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுளாக அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் MyDeal.lk நிறுவனம் வாடிக்கையாளருக்கு கவர்ச்சிமிக்க புதிய டீல்களை நாளாந்தம் வழங்கி வருகிறது.
இந்த புதிய ஒப்பந்தம் ஊடாக வாடிக்கையாளர்கள் தற்போது விநியோகம் தொடர்பில் பதிவுகளை பேணவும் மற்றும் தங்களது கைபேசியில் Hire1 செயலியை நிறுவி விநியோகம் தொடர்பான அறிவிப்புக்களையும் பெற முடியும்.
கொழும்பிலுள்ள நகரங்களுக்கான MyDeal  இன் புதிய விநியோக சேவை பங்காளராக இணைந்து கொண்டுள்ள Hire1  உடன் தற்போது வாடிக்கையாளர்கள் தாம் Oder செய்த பொருட்களை 24 மணிநேரத்திற்குள் பெற்றுக்கொள்ள முடியும்” என MyDeal.lk நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தமித் கினிகதரகே தெரிவித்துள்ளார்.
Hire1 மற்றும் MyDealk.lk ஆகியவற்றுக்கிடையேயான கைகோர்ப்பு நகர்ப்புற  எதிர்காலத்தை வலுப்படுத்துவதுடன் விரைவான மற்றும் நம்பகமான விநியோகம் ஊடான ஒன்லைன் ஷொப்பிங் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது.Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment