அரசு ஏற்படுத்திய பாதுகாப்பு பாதைகள்

 Image result for சிரியாவில் ஜ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த வடபகுதி நகரான அலெப்போ நகர்

சிரியாவில் ஜ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த வடபகுதி நகரான அலெப்போ 

நகர், தற்போது அரச படையினரின் வசம் வந்த நிலையில், அந்நகரில் சிக்கியிருந்த 

மக்கள் அரசு ஏற்படுத்திய பாதுகாப்பு பாதைகள் மூலம் வெளியேறி வருவதாக அந்நாட்டு 

தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.             

அந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் குடும்பம் 

குடும்பமாக வெளியேறும் புகைப்படங்களை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஒளிபரப்பி 

வருகின்றது. இருப்பினும், அலெப்போ நகரில் சுமார் 3 லட்சம் பேர் சிக்கியுள்ள 

நிலையில், அங்கிருந்து வெளியேறிய மக்களின் தொகை உத்தியோகபூர்வமாக 

அறிவிக்கப்படவில்லை. அலெப்போ நகரிலிருந்து வெளியேற பாதுகாப்பான பாதைகளை 

அமைப்பதாக ரஷ்யா கூறியதை அடுத்து, இரு நாட்கள் கழித்து இந்த நடவடிக்கை 

மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.               

இந்த மனிதநேய பாதைகளை ஐ.நா நிர்வகிக்க வேண்டும் மற்றும் 48 மணி நேர போர் 

நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு அங்கிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற 

அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சிரியாவுக்கான ஐ.நாவின் சிறப்புத் தூதர் ஸ்டெபன் 

டி மிஸ்டிரா தெரிவித்திருக்கிறார்.கிழக்கு சிரியாவில் மோதல் 

ஆரம்பித்தவுடன், அலெப்போவில் இருந்து வெளியேற விரும்பும் மக்கள் பாதுகாப்பு 

படையினரின் உதவியை நாடுமாறும், அங்கு பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் 

ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் எனவும் சிரிய 

ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அறிவிப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment