Image result for விமல் வீரவன்ச
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் திடீரென்று இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும் , தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச இதனை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பிர்களுடைய பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அவர்களை கொழும்புக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கான காரணம் எமக்குத் தெரியாது. எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதியாக இருக்கும் நிலையில் அக்கட்சியின் முன்னாள் செயலாளரின் சிலைக்கு மாலை போட்டதற்காக இரண்டுபேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் குறித்த வாகனங்களை உரிய அனுமதி பெற்றே தருவித்திருந்தோம்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் பாதாள உலகக்கும்பல் ஒன்றின் தலைவர் போன்று நடந்து கொள்கின்றார்.
இவர் பொலிஸ் சீருடையைக் கழற்றி வைத்துவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பச்சை வர்ண ஆடையொன்றை உடுத்திக் கொள்வதே சிறந்தது என்றும் விமல் வீரவன்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment