தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி சிக்கினான்

கடந்த, 2000ம் ஆண்டு பெங்களூரு கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, கடந்த 16 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஷேக் அமீர் அலியை சி.ஐ.டி பொலிசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின், கலபுர்கி, கேசவாபுரா, பெங்களூரு ரோடு, ஜெகஜீவன்ராம் நகரின் பீட்டர் மற்றும் பால்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில், கடந்த 2000–ம் ஆண்டு ஜூலை மாதம் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், கிறிஸ்தவ தேவாலயங்கள் சேதம் அடைந்தன. மேலும், சிலர் காயம் அடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை சி.ஐ.டி. பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக, 29 பேர் மீது, சி.ஐ.டி., பொலிசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், 11 பேருக்கு மரண தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தானை சேர்ந்த ஐந்து பேரும், ஆந்திராவின் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான ஷேக் அமீர் அலி உள்ளிட்ட ஆறு பேரும், 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று, ஷேக் அமீர் அலியை, சி.ஐ.டி., பொலிசார் கைது செய்தனர். கைதான சேக் அமீர் அலி இந்தியாவில் தடை செய்யப்பட்ட டீன்தார் அஞ்சுமான் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அமீரிடம் பொலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment