பயனுள்ள வீட்டு மருத்துவக் குறிப்புகள்

* முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைக்காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. வெயில் சூட்டினால் வயிற்று வலி  வரும். இதற்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட, வயிற்று வலி பறந்து விடும். ரோஜா இதழ்களுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் சூடு குறையும். வாய் மணக்கும்.

* இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊற வைத்து, அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும். கடைந்தெடுத்த மோரில் அரை மூடி எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து, சிறிது வெங்காயச் சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சோர்வடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது. மாவிலை வயிற்றுப் போக்கையும், மாம்பூ வெள்ளை வெட்டை நோயையும் நீக்கும். மாங்காய் ஸ்கர்வி நோயை விரட்டுகிறது.


* மாம்பழம், மாம்பழச்சாறு உடலுக்கு ஊட்டச்சத்தையும் வன்மையையும் தரக் கூடியது. பட்டுப்புடவையைத் துவைத்த பிறகு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீரில் கடைசியாக ஒருமுறை அலசி எடுக்கவும். புடவை புதிது போல பளபளப்பாகும். புடவையில் ஒரு நறுமணமும் வரும். வைட்டமின் ‡ஏ க்குத் தனியாக ஒரு மரியாதை உண்டு. வைட்டமின் ‡ ஏ உள்ள பப்பாளி, காரட், முருங்கைக் கீரை, அகத்தி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும்.
 
வெப்பத்தால் வரும் வயிற்று வலிக்கு ஒரு டம்ளர் மோரில் சிறிது உப்பு, சமையல் சோடா அரை கரண்டி கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

* உணவில் முள்ளங்கி அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீர் நோய்கள், கல்லீரல் நோய்கள் வராது. வேர்க்கடலையை வெல்லத்துடன் சாப்பிட வேண்டும். உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்கை இன்னொரு பொருளைச் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். மண் பாத்திரத்தில் காய்ச்சிய நீரை உணவுக்குப் பின் சாப்பிட்டால் புளியேப்பம், காய்ச்சல் நீங்கும். காலை எழுந்தவுடன் முதலில் கண்ணாடியைப் பார்ப்பது நல்லது. தன் பிம்பத்தையே பார்ப்பது மகிழ்ச்சியானது.

* மாரடைப்பைத் தடுக்க, கொழுப்புச் சத்துமிக்க பொருட்களை சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். பாமாயில், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். மது, புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். உணவில் உப்பின் அளவு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

* காதில் சேரும் அழுக்கை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காதுகளில் உள்ள சிறு மயிர்க்கால்களால் அழுக்கு வெளியேற்றப்படும். காது அழுக்கை எடுக்கிறேன் என்று சும்மா கதைக் குடையக்கூடாது. சாப்பிட்டதும் குண்டூசி அல்லது குச்சிகளைக் கொண்டு பற்களைக் குத்தக் கூடாது. அப்படிக் குத்தும்போது பல்லின் எனாமல்பாதிக்கப்படுவதோடு, ஈறுகளில் காயம் ஏற்படும். மேலும் பற்களைத் தொடர்ந்து குடைவதால் பற்களின் இடையே உள்ள இடைவெளி அதிகமாகி நாளடைவில் பல் பழுதுபட வாய்ப்பு ஏற்படும். மூக்கின் வழியாக வெளிப்பொருட்கள் நுழைந்தால் அவற்றை வெளியேற்றக்கூடிய அனிச்சை செயல் தான் தும்மல். மற்றபடி ராசியான தும்மல், ராசி இல்லாத தும்மல் என்று எதுவுமில்லை.

* கடலை மாவு, செம்பருத்தி, வெள்ளரிக்காய், ஆரஞ்சுத்தோல் ஆகியவை முக அழகிற்கு ஆரோக்கியமானவை. செயற்கைப் பொருட்களை விட இயற்கையாகக் கிடைப்பவை சிறந்தது.  தீராத இருமல் இருந்தால், மிளகைப் பொடி செய்து வெல்லத்துடன் கலந்து, சிறிது நேரம் தொண்டையில் வைத்திருந்து அந்தச் சாறை விழுங்கினால் சட்டென்று இருமல் நிற்கும்.Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment