சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு




வரி செலுத்தாதவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு அரசாங்கம் 

தீர்மானித்துள்ளது. இதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட 

அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் 

பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 

ஊடக சந்திப்பொன்றிலேயே அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அத்தோடு, வரி 

செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனைகளும் 

வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் இதன்போது தெரிவித்தார். உள்ளூராட்சி 

ன்றங்களுக்கு வரும் வருமானங்களில் பல சிக்கல்கள் காணப்படும் நிலையில்

இதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கொழும்பில் இன்று 

நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இதேவேளை

கொழும்பு, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில்

டெங்கு நுளம்புகள் பெருகுவதை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 25 வீதத்தால் 

குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment