ஜனாதிபதி கிண்ண ரக்பி போட்டிகள்: 10 ஆவது தடவையாக சாம்பியனானது கொழும்பு இசிபத்தன கல்லூரி

அகில இலங்கை பாடசாலைகள் மட்ட 20 வயதிற்குட்பட்டோருக்கான ஜனாதிபதி கிண்ண நொக் அவுட் ரக்பி போட்டிகளில் கொழும்பு இசிபத்தன கல்லூரி அணி 10 ஆவது தடவையாக சாம்பியனானது.
இது ஓராண்டில் ரக்பி லீக், நொக் அவுட் மற்றும் அணிக்கு எழுவர் கொண்ட ரக்பி சாம்பியன் பட்டம் ஆகியவற்றை இசிபத்தன கல்லூரி வென்ற ஐந்தாவது சந்தர்ப்பமாகும்.
அகில இலங்கை பாடசாலைகள் மட்ட 20 வயதிற்குட்பட்டோருக்கான ஜனாதிபதி கிண்ண நொக் அவுட் ரக்பி போட்டிகளின் இறுதிப்போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இன்று மாலை நடைபெற்றது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
போட்டியில் ஆரம்பம் முதலே சவாலாக விளையாடிய இசிபத்தன அணி 12 ஆவது நிமிடத்தில் புள்ளிகள் பெறுவதனை ஆரம்பித்து வைத்தது.
முதல் பகுதியில் ரோயல் அணியால் 7 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்ததுடன் அதன்படி 19 – 7 எனும் புள்ளிகள் கணக்கில் இசிபத்தன அணி முன்னிலை வகித்தது.
இரண்டாம் பகுதியிலும் ஆக்ரோஷமாக விளையாடிய இசிபத்தன அணி மேலும் 28 புள்ளிகளைக் கைப்பற்றி ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது.
ரோயல் அணியால் இரண்டாம் பகுதியில் 5 புள்ளிகளுக்கு மேல் பெற முடியவில்லை.

அதன் பிரகாரம் 47 – 12 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் இசிபத்தன அணி வெற்றிவாகை சூடியது
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment