அந்தமானில் மாயமான விமானம்: செயற்கைக்கோள் மூலம் தேட இஸ்ரோ முடிவு

Image result for Andaman Magical indian flight
அந்தமானில் மாயமான இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என் - 32 ரக விமானத்தை செயற்கைக்கோள் மூலம் தேட முடிவு செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.கடந்த 22ம் தேதி இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏ.என் -32 என்ற விமானம்
தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில் அன்று காலை 8.30 மணியளவில் விமானம் ரேடாரில் இருந்து மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாயமான விமானத்தில் 29 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏ.என் -32 விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல்படை விமானம், ராணுவ ஹெலிகாப்டர்கள், அதிநவீன கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போன விமானத்தை செயற்கைக்கோள் உதவியுடன் தேட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரேடார் செயற்கைக்கோள் மூலம் இரவிலும், பகலிலும் படங்களை எடுக்க முடியும் என்பதால், விமானம் எங்கு உள்ளது அல்லது அதன் உடைந்த பாகங்கள் எங்காவது கடலில் தென்படுகிறதா? என்பதை கண்டறிய முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த ரேடாரில் உள்ள மைக்ரோ அலைகள், மேகங்களையும் ஊடுருவி செல்லும் திறன் கொண்டவை. எனவே இந்த செயற்கைக்கோள் உதவியுடன், காணாமல் போன விமானத்தை கண்டறிய தீவிர முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறுகையில், காணாமல் போன ஏ.என்.-32 ரக விமானத்தை கண்டறிவதற்காக "ரிசாட்' செயற்கைக்கோளை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த செயற்கைக்கோள் இரவு, பகல் நேரங்களில் துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டது என கூறியுள்ளார்.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment