இலங்கையில்
கெசினோ நிலையங்களை நிறுவ முதலீட்டாளர்களுக்கு அனுமதி
வழங்கப்படமாட்டாதென பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரிலுள்ள
ஷங்கரில்லா ஹோட்டலில் கடந்த 19 ஆம் திகதி
நடத்தப்பட்ட
வியாபார பேரவையில் பிரதமரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே
பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த
வியாபார பேரவையை சிங்கப்பூரின் சர்வதேச நிறுவன அமைப்புக்கள் ஏற்பாடு
செய்திருந்தன.
இங்கு முதலீட்டாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது
வர்த்தகர் ஒருவர், கடந்த
அரசாங்கம் செய்தது போல இந்த அரசாங்கமும்
இலங்கையில் கெசினோ நிலையங்களை நிறுவி
முதலீடு செய்ய ஊக்குவிக்குமா என
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி
எழுப்பினார். இதற்கு பதிலளித்த போதே,
பிரதமர்
இலங்கையில் எந்தவொரு முதலீட்டாளருக்கும் கெசினோ நிலையங்களை
நிறுவ அனுமதியளிக்கப்பட
மாட்டாதென உறுதியாக கூறினார். இதேவேளை,
நாட்டின் அபிவிருத்திக்காக
"கெசினோ " தொழிற்சாலைகளில் தங்கியிருப்பது
நல்லாட்சி அரசாங்கத்தின்
கொள்கையல்ல என்றும் பிரதமர் சிங்கப்பூர்
வியாபாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரில்
உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த முன்னணி வகிக்கும் தொழில்
நிறுவனங்களை
பிரதிநிதித்துவம் செய்யும் பெரும் எண்ணிக்கையான வியாபாரிகள்
இப்பேரவையில்
கலந்துகொண்ட இலங்கைக்கான சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக்
சமரவிக்கிரம மற்றும்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர்
இலங்கையின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக
ஏற்படுத்தப்பட்டுள்ள சலுகைகள்
மற்றும் சந்தர்ப்பங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
முதலீடுகளை
ஊக்குவிப்பதற்கு ஏற்ற வகையிலான சிறந்த சூழல் தற்போது
இலங்கையில் உருவாகியிருப்பதாக
சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் கைத்தொழில்
அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இதன் போது
தெரிவித்தார்.
அத்துடன்
இலங்கையில் வழங்கப்படும் இச்சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக
பயன்படுத்த விரும்பும்
அனைத்து சிங்கப்பூர் பிரஜைகளுக்கும் சிங்கப்பூர் அரசாங்கம்
பூரண ஒத்துழைப்பை
பெற்றுத் தருமென்றும் அவர் கூறினார்.
இக்கலந்துரையாடலை
தொடர்ந்து இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள மாநகர
அபிவிருத்தி திட்டத்துக்கான
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிங்கப்பூரின் சுபனா ஜூரொங்
நிறுவனமும் இலங்கை
அரசாங்கமும் கைச்சாத்திட்டன.
இலங்கை
சார்பில் சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் நிமல்
வீரரத்னவும் சிங்கப்பூர் நிறுவனம் சார்பில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி சொங்
ஹையங் பெயினும்
புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
0 comments:
Post a Comment