மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து


Image result for Malaysia boat accident


மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 

14 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.   மலேசியாவின் ஜோஹார் மாநிலத்திலிருந்து 

62 அகதிகள் படகு ஒன்றில் தங்களது சொந்த நாடான இந்தோனேசியாவிற்கு திரும்பினர். 

இந்நிலையில் கடலில் ராட்சத அலைகள் எழுந்ததால் அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து 

விபத்துக்குள்ளானது. இதையடுத்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 பெண்கள்

26 ஆண்களை அந்த வழியாக ரோந்து வந்த கடலோர காவல்படையினர் பத்திரமாக 

மீட்டனர்.இவ்விபத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.12 பேரின் 

நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதனிடையே காணாமல் போனவர்களை 

தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment