பிரச்சினைகளுக்கு துப்பாக்கிகளால் தீர்வு காண முடியாது....

Image result for minister vijith vijayamuni soysa
எமது நாட்டில் வெவ்வேறு மொழிகளைப் பேசக்கூடிய பல இன மக்கள் வாழ்ந்துவருகின்றமை எமது நாட்டுக்கு அழகாகும்.
இந்த மாவட்ட மக்களின் கண்ணீர் காவியம் எனக்கு நன்றாகத் விளங்குகிறது. கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தால் விலை மதிப்பீடு செய்ய முடியாதவற்றை இழந்தோம். இப்போது வேலையில்லாமை, பொருளாதாரம் போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.
இப்பிரச்சினைகளுக்கு துப்பாக்கிகளால் தீர்வு காண முடியாது' எனவும் நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்ப்பாசன மற்றும் விவசாயத்துறை அபிவிருத்திகளுக்காக இவ்வருடம் 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதேவேளை, கித்துள் -உறுகாமம் நீர்ப்பாசனக் குளங்களின் இணைப்புக்கு முதற்கட்டமாக கட்டடப் பணிக்கு 50 ரூபாய் மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிதி இவ்வருட இறுதிக்குள் முறையாகச் செலவிடப்பட்டு முடிய வேண்டுமென்பதுடன், அதற்கு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளும்ம க்கள் பிரதிநிதிகளும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு, உறுகாமம் நீர்ப்பாசன திட்ட முகாமைத்துவக் குழுவின் ஏற்பாட்டில் சிறுபோக அறுவடை விழா, சின்னவெளிக் கண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் எவ்விதமான சவால்களுக்கும் முகங்கொடுத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது.
இச்சூழ்நிலையில், அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் எங்களில் ஒரு சிலர் அல்லது பிரத்தியேகமாக ஒரு குழுவினர் மேற்கொண்டுவரும் முயற்சிகளை சவாலாக ஏற்றுக்கொள்ளவும் நல்லாட்சி அரசாங்கம் தயாராகவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின்; தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை எந்தவொரு சக்தியாலும் வீழ்த்த முடியாது' என்றார்.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment