வெளிநாடு செல்லும் தமிழ் உறவுகளுக்கு அவசர எச்சரிக்கை

Image result for வெளிநாடு செல்லும் தமிழ் உறவுகளுக்கு அவசர எச்சரிக்கை

 

பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது. இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது.

வேலை பார்த்தல்

பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட வேலை செய்வதற்கு விஷேட அனுமதி வழங்கி அவ்வேலை செய்யாமல் வேறொரு வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். அவ்வாறான குற்றத்தை இழைப்பவர்களுக்கு குடிவரவு ரிதீயான எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது.
வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு (employor) 5 ஆண்டுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். இச்சட்டமானது 12ம் திகதி ஆடி மாதம் 2016-ல் இருந்து அமுலுக்கு வருகின்றது.
வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துபவர் தொடர்பான அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்கள் நிபுணத்துவக் கட்டணம் (skill charge) செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
உள்துறை அமைச்சு ஒரு வருடத்துக்கான நிபுணத்துவ கட்டணம் € 2,000யும் சிறிய அமைப்புகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் நிபுணத்துவ கட்டணம் € 364 அறவிட தீர்மானித்துள்ளது.
ஆனால் PHD-level மற்றும் tier-4 மாணவர்கள் வேலை பார்க்கும் குடிவரவு (tier-2) நிலைக்கு மாறும் போது இக்கட்டணம் அறிவிடப்படமாட்டது, இந்த சட்ட மாற்றமானது சித்திரை மாதம் 2017 ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும்.

குடியிருப்புகளில் குடியிருப்பு தொடர்பான மாற்றங்கள் (Residential Finance)

பிரித்தானியாவில் குடிவரவு திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் வருபவர்களை வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு சரியான முறையினை பின்பற்றி வெளியேற்ற வேண்டும்.
இச்சட்டமானது இச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னுள்ள வாடகை ஒப்பந்தத்திற்கும் இனி வழங்க இருக்கும் வாடகை ஒப்பந்தத்திற்கும் ஏற்புடையதாகும். இச்சட்டத்தை பேணாத வீட்டு உரிமையாளர்களுக்கு 5 வருடத்துக்கு உட்பட்ட சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படும்.
இவ்விடயம் சம்பந்தமாக வீட்டு உரிமையாளர்களும் (HOME OWNERS) வீட்டு உரிமையாளர்களின் முகவர்களும் (ESTATE AGENT) விரைந்து செயற்பட பணிக்கப்படுகின்றனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான மாற்றங்கள்

பிரித்தானிய வசிப்பிட உரிமை இல்லாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்கள் ரத்து செய்யப்படும். மேலும் வசிப்பிட உரிமை இல்லாமல் வாகனம் செலுத்துபவர்களின் வாகனம் அரசினால் எடுத்துக் கொள்ளப்பட்டு ஒட்டுநருக்கு 11கிழமைக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

வங்கி கணக்குகள் (Bank Accounts)

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் வசிப்பிட உரிமை வங்கிகளால் சோதனை செய்யப்படும், இதனை செயல்படுத்தப்படும் வங்கிகளுக்கு கட்டுப்பாட்டு வரைமுறை விரைவில் வெளியிடப்படும்.
வசிப்பிட உரிமையினை குடிவரவுத் திணைக்களத்துடன் உறுதி செய்வதில் ஏற்படும் செலவை வங்கி அதன் வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும்.
பிரித்தானியா வசிப்பிடவுரிமை இல்லாமல் வசிப்பவர்களின் வங்கிக் கணக்குகள் நிறுத்தப்படும் அல்லது நீதிமன்ற அனுமதியுடன் குறிப்பிட்ட கணக்குகள் உறைவு நிலை அனுமதியை (FROZEN ORDER) பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இச்சட்டமானது பிரித்தானிய காவல்துறைக்கு உள்ள அதிகாரத்தை விட மேலதிகமான அதிகாரத்தினை பிரித்தானிய வதிவுடமை இல்லாதவரை பிடித்தல் அவரது உடமைகளை தேடுதல் மற்றும் உடமைகளை கைப்பற்றுதல் தொடர்பாக வழங்கியுள்ளது.
இச்சட்டமானது குடிவரவு விதிகளை மீறுபவர்களை குற்றவியல் தண்டனைக்கு உள்ளானவர்களுக்கும் மேலாக தண்டிக்கின்றது. இச்சட்டம் வரைவு நிலையில் இருக்கும் போது பல்வேறுபட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சட்டமாகியுள்ளது.
மனித உரிமைகளை சிறப்பாக பேணிப் பாதுகாத்து வந்த பிரித்தானிய இன்று அதன் வரம்புகளில் ஏறி நின்று அதனை கவனிக்காமல் விடுவது காலத்தின் கட்டாயம் ஆகியுள்ளது.
மேலும் இச்சட்டமானது குடிவரவாளர்களை விடுவிப்பது குடிவரவாளர்களை தடுத்து வைத்தல் மேல் முறையீட்டு அனுமதி மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பான பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது.

Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment