பிரித்தானிய நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து டேவிட் கமரூன் நேற்று விலகியதை தொடர்ந்து உள்துறை அமைச்சரான தெரசா மே புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், No.10 Dowining Street இல் உள்ள தனது பிரதம அலுவலக இல்லத்தினை கமரூன் காலி செய்யும் பொருட்டு, தனது வீட்டில் உள்ள பொருட்களை ஒரு பெட்டியில் எடுத்துச்செல்வது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அவர் சுமந்து செல்லும் பெட்டியில் "கவனமாக கையாள வேண்டும்" என எழுதப்பட்டுள்ளது, சமூகவலைதளங்களில் வைரலான இந்த புகைப்படத்தை அனைவரும் ஷேர் செய்தனர்,
ஆனால், இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது அல்லது, கடந்த 2007 ஆம் ஆண்டு கமரூன் தனது குடும்பத்தினருடன் North Kensington - இல் உள்ள புது வீட்டில் குடியேறுவதற்காக பொருட்களை சுமந்து செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தவறுதலாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
0 comments:
Post a Comment